தஞ்சையில் 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபருக்கு தஞ்சை மகிளா நீதிமன்றம் 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
3 வயது குழந்தையை உடம்பெல்லாம் கடித்து கொடூர கொலை! இளைஞனுக்கு கிடைத்த தரமான தண்டனை!

தஞ்சை ரெட்டிபாளையத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவர் அந்தப் பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறான். கடந்த 2012ஆம் ஆண்டு தனது காம மோகத்தால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தைக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்று குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளான்.
பின்னர் குழந்தையை அருகிலுள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று குழந்தையின் உடல் முழுவதும் கடித்து துன்புறுத்தியும் பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் சத்யராஜை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து சத்யராஜ் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மகிளா நீதிமன்றம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக சத்தியராஜ்க்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 17 ஆண்டுகளும் அவன் சிறையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.