17 வயது மாணவி செய்த ஒரே ஒரு செயல்! உலகம் முழுவதும் தற்போது இவர் தான் டிரென்ட்!

பிலிப்பைன்சில் பள்ளி பிரிவு உபசார விழாவுக்காக 17 வயது மாண்வி தயாரித்த கவுன் உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பள்ளி மாணவி சியரா கன். இவர் தனது பள்ளி பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் அணிந்து கொள்வதற்காகா விளையாட்டாகத் தான் அந்த கவுனைத் தயாரித்தார். அந்த கவுன் தான் தனக்கு உலக அளவில் புகழை பெற்றுத் தரப் போகிறது என பணியைத் தொடங்கும்போது அவருக்குத் தெரியாது. 

கவுனில் அக்ரிலிக் பெயின்ட் மூலம் 80 மலர்களை வரைந்த அவர், அலங்காரக் கல் வேலைப்பாடுகளையும் செய்து ஒரு மாத கால மிகக்கடுமையான உழைப்புக்கிடையே கவுனை உருவாக்கினார். அப்பொது  அவர் செய்த மற்றொரு பணிதான் அவர் உலக அளவில் பாராட்டை பெற காரணமாக அமைந்தது. கவுனின் வேலைப்பாடுகள் முடிந்த நிலையில் அதனை போட்டோ எடுத்து அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

அவர் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே அவர் எதிர்பாராத விதமாக அது வைரலாகி சுமார் 4 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து பாராட்டு தெரிவித்தனர். பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள் பல்ரூம் 17 வயது சியராவின் திறமையை கண்டு வியப்புத் தெரிவித்தனர். கவுன் என்ன விலையானாலும் வாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பதாக பலரும் பதிவிட்டனர். 

ட்விட்டரில் கிடைத்துள்ள பலத்த வரவேற்பால், சியரா கன் எதிர்பாராத மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். தொடர்ந்து ஆடை வடிவமைப்பில் ஈடுபடுவீர்களா என பலர் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.