5 பேர்! 6 மாதம்! மாறி மாறி தகாத உறவு! 17 வயது இளம் பெண் கர்ப்பமான பரிதாபம்!

பெங்களூரு: 17 வயது பெண்ணை 6 மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் உள்ள விட்டல் பகுதியில், 17 வயது இளம்பெண், ஒரு வீட்டில் உதவியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், வீட்டு வேலைக்கு வந்த அப்பெண்ணை, வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து, கடந்த 6 மாதங்களாக வெளியில் விடாமல் அடைத்து வைத்துக் கொண்டு, நினைத்த நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்ததில், அந்த பெண் கர்ப்பமடைந்திருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவரை அழைத்து, அந்த பெண்ணிற்கு சிகிச்சை தரும்படி, குறிப்பிட்ட நபர்கள் கூறியிருக்கிறார்கள். இதன்பேரில், அந்த தொண்டு நிறுவன ஊழியர் சென்றபோது, அவரிடம் தனது சித்ரவதை கதையை அப்பெண் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து, அவரை மீட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.