ஓடும் காரில் ஆண்கள் 6 பேர் மாறி மாறி...! 17 வயது இளைஞனை கற்பழித்த பயங்கரம்!

கொல்கத்தாவில் 17 வயது சிறுவனை ஓடும் காரில் 6 இளைஞர்கள் பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


கொல்கத்தாவிl தீபாவளி தினத்திற்கு அடுத்த நாள் 17 வயது சிறுவன் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் பொழுது, காரில் வந்த ஆறு இளைஞர்கள் சிறுவனை வற்புறுத்தி காரில் ஏற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சிறுவனை வெளியே தூக்கி வீசிவிட்டு காரில் பறந்தனர்.

மேலும் சிறுவனிடம் இருந்த சுமார் 17,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும், அணிந்திருந்த சில்வர் செயினையும் பறித்துள்ளனர். இது குறித்து காவல்துறையில் சிறுவன் புகார் அளித்துள்ளார். பிறகு மருத்துவமனை சோதனைக்கு அனுப்பப்பட்ட சிறுவனின் உடலில் ஆங்காங்கே கீறல் காயம் இருப்பதும், பாலியல் சீண்டலுக்கான தடங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது.  

6 இளைஞர்களில் முக்கிய நபரை காவல்துறையினர் வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 6 பேர் மீதும் போக்ஷோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.