நடிக்கச் சான்ஸ் தர்றேன்! ஆசை காட்டி 17 வயது பெண்ணை வேட்டையாடிய நடிகர்! திரையுலக அதிர்ச்சி!

17 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மராத்திய நடிகர் கொலை செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மராட்டிய மாநிலத்தில் மிகப்பெரிய இயக்குனர்கள் மந்தர் குல்கர்னி. இவர் நடிகர்களை உருவாக்குவதற்காக தனியாக நாடக வொர்க்ஷாப் நடத்தி வருகிறார். நடிப்பு கற்றுக்கொள்வதற்காக 17 வயது பெண்ணொருவர் வொர்க்ஷாப்பில் சேர்ந்தார். 

16-ஆம் தேதியன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு அழைத்துள்ளார். அந்த பெண்ணிடம் தன் நாடகத்தில் அவரை கண்டிப்பாக நடிக்க வைப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் சில உடைகளை கொடுத்து அந்தப்பெண்ணை அணிந்து வருமாறு கூறியுள்ளார். அந்த பெண் குல்கர்னி அளித்த உடைகளை அணிந்து வந்தார். 

இறுதியாக குல்கர்னி அந்தப் பெண்ணிடம் பிகினி உடையில் வருமாறு கூறியுள்ளார். இதை கேட்ட அந்த பெண் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அப்போது குல்கர்னி அந்தப்பெண்ணிடம் பல நடிகைகளின் பிகினி புகைப்படங்களை காண்பித்தார். அணிந்து வந்தால் தான் படத்தில் வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி அந்தப்பெண் பிகினி உடையில் வந்தார். குல்கர்னியின் வீட்டிலிருந்து அந்தப்பெண் வீட்டிற்கு சென்றார். தனது நிகழ்ந்தவற்றை தன் தாயிடம் கூறி முறையிட்டுள்ளார். 

உடனடியாக பெண்ணின் தாய் இயக்குநர் குல்கர்னி மீது டெக்கான் காவல் நிலையத்தில் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 23-ஆம் தேதியன்று குல்கர்னியை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவமானது மராட்டிய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.