17 வயது இளம்பெண் உடலில் காயங்களுடன் வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வயசு தான் ஆகுது..! நைட் தூங்க அங்க தான் போவா..! இப்போ உடம்பெல்லாம் காயம்..! மவுனிகாவுக்கு நள்ளிரவில் நடந்தது என்ன?
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் என்ற பகுதிக்கு அருகேயுள்ள மகிழஞ்சேரி என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயியான செந்தில் குமாருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். விவசாயி செந்தில்குமாரின் மகள் மௌனிகா தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் இன்று வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் செந்தில்குமாரின் மகள் மௌனிகா உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
காயங்களுடன் மோனிகாவின் சடலத்தைக் கண்ட அந்த கிராம மக்கள் பதறிப் போயினர். என்ன செய்வதென்று அறியாமல் அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயங்களுடன் சடலமாக இருந்த மோனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மௌனிகா எவ்வாறு இறந்தார் என்று இதுவரை தெரியவில்லை.
அவரது உடலில் காயங்கள் இருப்பதால் அவரது மரணத்தில் நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மௌனிகா மரணம் குறித்து தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் காயங்களுடன் இளம்பெண் சடலமாக இருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது விடுமுறை என்பதால் இரவு தூங்க அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு மவுனிகா செல்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு உறங்கச் செல்வதாக கூறியவர் தான் காலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனால் நள்ளிரவில் நடந்தது என்ன என்று விசாரணை நடைபெற்று வருகிறது.