17 வயசு பொன்னு கூட செய்ற காரியமாடா இது? ரயில் நிலையத்தில் சிக்கிய இளைஞன்! கோவை பரபரப்பு!

இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணியூர் பகுதியிலுள்ள பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராய்மோன் என்ற இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையே ராய்மோன் இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கேரளா மாநிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இங்கு தனது மகளை காணவில்லை என்று இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கேரள மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு ராய்மோன்  பாலியல் தொந்தரவுகளை கொடுத்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இருவரும் கேரள மாநிலத்திற்கு சென்றிருந்தது தெரியவந்துள்ளது. நேற்று காலை கேரளாவிலிருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் வந்த 2 பேரையும் காவல்துறையினர் அழைத்து சென்றனர். பின்னர் விசாரணை நடத்தியதில் கேரளா மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு ராய்மோன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது.

உடனடியாக காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவமானது நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.