16 வயது சிறுமியுடன் 5 பேர் மாறி மாறி பாலியல் வல்லுறவு! வீடியோ பதிவு செய்து வெளியிட்டு கொடூரம்!

16 வயது சிறுமி ஒருவரை, 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.


அசாம் மாநிலத்தில் உள்ள ஹோஜாய் மாவட்டத்தின் வனப்பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள அகாஷிகங்கா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் திக்ஹல்ஜ்ஹருனி என்ற கிராமம் உள்ளது.

இங்கு வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவரை, 5 பேர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக படம்பிடித்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வரும் இந்த வீடியோ தொடர்பாக, அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுவரையிலும் 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.