குடிபோதையில் நள்ளிரவில் வந்த தந்தை! தட்டிக் கேட்ட மகளுக்கு நேர்ந்த பயங்கரம்! அதிர்ச்சியில் உறைந்த தாய்!

பள்ளி மாணவி ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்து பெண்ணின் தந்தையிடம் விசாரணை நடத்தி வருவது மனப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி என்னும் இடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய வயது 38. இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு சினேகா என்னும் மகள் உள்ளார். 16 வயது மதிக்கத்தக்க சினேகா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார்.

செல்வராஜ் அதீத மதுப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தன் மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டவர். வழக்கம்போல நேற்று முன்தினம் செல்வராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.

தன் மனைவியை கண்முன் பாராமல் அடித்து துன்புறுத்தியுள்ளார். "அம்மாவை ஏன் அடிக்கிறீர்கள்" என்று சினேகா தட்டி கேட்டபோது அவரையும் சரமாரியாக மண்வெட்டியால் அடித்து தாக்கியுள்ளார்.

இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் சினேகா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய சினேகாவின் தாயார், தன் மகள் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டவுடன் பேரதிர்ச்சி அடைந்தார்.

சம்பவமறிந்த மணப்பாறை பகுதி காவல் துறையினர் சினேகாவின் வீட்டிற்கு விரைந்து வந்தனர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர் சினேகா தற்கொலை செய்து கொண்டாரா???  இல்லை அவருடைய தந்தை மண்வெட்டியால் அடித்தபோதே இறந்து, செல்வராஜ் சினேகா தற்கொலை செய்து கொண்டதை போன்று நாடகமாடுகிறாரா?? என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.