ஒரே நேரத்தில் 15 ஆயிரம் ஊழியர்கள் ராஜினாமா..! ஆக்சிஸ் வங்கியிடம் இருந்து தப்பித்து ஓடும் அதிகாரிகள்! அதிர்ச்சி காரணம்!

ஆக்சிஸ் வங்கியில் கடந்த சில மாதங்களாக நிர்வாகிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை 15,000 பேர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதனால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கும் அபாயம் இருக்கிறது என்றாலும், புதிய பணியாளர்களை விரைவில் நியமிக்க உள்ளதாக ஆக்ஸிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் புதியதாக 28,000 பேரை பணியில் அமர்த்தியுள்ள ஆக்ஸிஸ் நிர்வாகம் வரும் காலாண்டில் மேலும் 4,000 பேரை பணியில் அமர்த்த திட்டம் இட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் 12,800 பேரை வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 30,000 பேரை வேலைக்கு அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் ஆக்ஸிஸ் வங்கியில் 72,000 ஊழியர்கள் இருப்பதாக கூறும் நிர்வாகம் கடந்த நிதியாண்டில் 11,500 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தது. வங்கி வேகமாக விரிவடைந்து வருவதால் அதிக எண்ணிக்கையிலான புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மொத்த மற்றும் நிகர அடிப்படையில் வளர்ச்சியும் அதிகம் எனவங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதியாண்டில் வங்கியின், வருவாய் விகிதம் கிட்டத்தட்ட 19% ஆகும். ஆக்சிஸ் வங்கியின் சராசரி வளர்ச்சி விகிதம் 15% மாக உள்ளது. கூடுதலாக பணியாளர்களை நியமிக்க உள்ளதாகல் வேலையில்லா பட்டதாரிகள் இப்போதிலிருந்தே விண்ணப்பித்து பயன் அடையுங்கள்.