15 ஆயிரம் பேருக்கு சுடச்சுட மட்டன் பிரியாணி..! வாரி வழங்கிய திண்டுக்கல் முஸ்லீம்கள்! ஏன் தெரியுமா?

கந்தூரி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் 15,000 பேருக்கு மட்டன் பிரியாணி அழிக்கப்பட்ட சம்பவமானது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில் கொண்டாடும் வகையில் கந்தூரி விழாக்கள் நடைபெறுவது வழக்கம். உலகம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் பல்வேறு வகையான காரணங்களுக்காக கந்தூரி விழாக்கள் நடத்தப்படும். 

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் "ரசூலுல்லாஹ்" பிறந்தநாளுக்காக கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதற்காக 15 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி செய்து தரப்பட்டது. நாகல் நகர் மற்றும் ஜங்ஷன் பள்ளிவாசல்கள் சேர்ந்தவர்கள் அளித்த நன்கொடையின் பெயரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது கூறப்படுகிறது.

300 கிலோ மட்டன், 500 கிலோ அரிசி, 200 கிலோ தயிர் ஆகியவற்றை உபயோகப்படுத்தி மட்டன் பிரியாணியும், தயிர் பச்சடியும் செய்யப்பட்டுள்ளது. மத ஒற்றுமையை போற்றும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் வரிசையில் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர், ரவுண்டு ரோடு புதூர், பாரதிபுரம், ரயில்வே ஜங்ஷன் ஆகிய பகுதிகளிலிருந்து 15,000 பேருக்கும் மேற்பட்டோர் வந்து வரிசையில் காத்திருந்து பிரியாணியை பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 7 மணி தொடங்கி 1 மணி வரை இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் பாத்திரங்களுடன் காத்திருந்து பிரியாணி வாங்கி சென்றனர் என்று அருகிலிருந்தோர் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டு மக்களிடையே நிலவும் மத ஒற்றுமையை போற்றும் வகையில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது.