பட்டப் பகலில் வீடு புகுந்து 15 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு - அதிர வைக்கும் சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டப் பகலில் வீடு புகுந்து 15 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம்செய்த 20 வயது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கடந்த செவ்வாயன்று முசாஃபர் நகர் மாவட்டத்தில் பாமன்ஹெரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமியின் தாய் சொந்தப் பணிகள் காரணமாக வீட்டை விட்டு வெளியில் சென்றிருந்த நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர்களது வீட்டில் அத்துமீறி நுழைந்த மோகித் என்ற 20 வயது இளைஞன் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

வெளியில் சென்றிருந்த தாய் வீடு திரும்பியபோது கதறி அழுத அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்ததை விளக்கினார். இதையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வாழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய மோகித்தை தேடி வருகின்றனர். 

அதேபோன்று மும்பையில் வெளிநாட்டு இளம் பெண்ணை போதை பானம் கொடூத்து பாலியல் பலாத்காரம் செய்த குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கஃபே பரேட் என்ற இடத்தின் குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் 52 வயதான பாத்மாகர் நந்தேகர். இவரது வீட்டில் பிரேசில் நாட்டில் இருந்து படிப்பதற்காக இந்தியா வந்த 19 வயது மாணவி தங்கியிருந்தார். 

இந்நிலையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி அந்தப் பெண்ணை மும்பை புறநகர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்ற நந்தேகர், குளிர்பானத்தில் போதை மருந்து கலந்துகொடுத்து அந்தப் பெண்  போதையில் ஆதிக்கத்தில் இருந்த போது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

மறுநாள் காலை இயல்பு நிலைக்கு வந்த போது தனக்கு நேர்ந்ததை புரிந்துகொண்ட அந்தப் பெண் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு பாந்த்ராவில் உள்ள வேறு குடும்பத்துக்கு குடிய் பெயர்ந்துவிட்டார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.