காதலை ஏற்காத தந்தையை கத்தியால் குத்தி தீ வைத்த 15 வயது மகள்! பெங்களூரு கொடூரம்

பெங்களூரில் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை காதலனுடன் சேர்ந்து பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ராஜஸ்தானை சேர்ந்த ஜெயக்குமார் ஜெயின் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் அப்பகுதியில் கடை வைத்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு மனைவி மற்றும் மகனை அனுப்பிவிட்டு ஜெயக்குமார் மற்றும் அவரது 15 வயது மகள் இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை காலை 10:30  மணி அளவில் அவரது வீட்டில் திடீரென புகை வர தொடங்கியது.

இந்நிலையில் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் பிணமாக கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தும் போது அவரது 15 வயது மகளிடம் விசாரனை நடத்தியுள்ளனர்.அதற்கு அப்பெண் இந்தச் சம்பவம் நடக்கும்போது தான் வீட்டில் இல்லை எனவும் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது மகளிடம் தீவிர விசாரணை நடத்திய போது தனது காதலனுடன் சேர்ந்து தனது தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதை ஒப்புக் கொண்டார்.

மேலும் இது குறித்து விசாரிக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்பெண்ணிற்கு அதே பகுதியில் வசித்து வரும் ஒரு ஆண் பழக்கமாகியுள்ளார். முதலில் நண்பர்களாக பழகி அவர்கள் பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து இருவரும் தனியே சுற்றித் திரிகையில் எதிர்பாராதவிதமாக ஜெயகுமார் பார்த்துள்ளார்.

 வீட்டிற்கு வந்ததும் தன்னை கண்டித்து அடித்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது காதலனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தாய் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் வெளியே சென்றுள்ள நிலையில் இத் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்துள்ளோம்.

தந்தை தனியாக வீட்டில் இருக்கும்போது எனது ஆண் நண்பரை வரவழைத்து முதலில் கத்தியால் குத்தி கொலை செய்தோம். பிறகு உடலை வெளியே எடுத்துச் சொல்லும்போது மாட்டிக் கொள்வோம் என அஞ்சி கழிவறையில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக அப்பெண் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அவரது மகள் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.