தைலக்காட்டுக்குள் வைத்து சிதைக்கப்பட்ட சிறுமி..! ஆடைகள் இல்லாமல் குற்றுயிரும், குலை உயிருமாக கிடந்த பயங்கரம்!

குடிதண்ணீர் எடுக்க சென்ற இடத்தில் சிறுமி வன்கொடுமை நேர்ந்துள்ள சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள நொடியூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர். இவருக்கு திருமணமாகி 8-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று தண்ணீர் பிடிப்பதற்காக அருகிலுள்ள குளத்திற்கு சென்றுள்ளார். 

ஆனால் நெடுநேரமாகியும் அந்த சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. சந்தேகித்த பெற்றோர் குளத்திற்கு அருகே சென்று பார்த்தனர். ஆனால் அங்கும் சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை. உடனடியாக சிறுமி சொல்லும் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்த்தனர். ஆனாலும், அந்த சிறுமியை கண்டுபிடிக்க இயலவில்லை.

பின்னர் அருகிலிருந்த தைலமரக்காட்டில் சிறுமியை தேடி பெற்றோர் சென்றுள்ளனர். அங்கு உடை கிழிந்த நிலையில், அந்த சிறுமி மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வந்துள்ளார். உடனடியாக, அவர்கள் தங்களுடைய மகளை மீட்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அப்பகுதி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட ஒரு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவில் பாதிக்கப்பட்ட பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்பது வெளியாகியுள்ளது. வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவமானது புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.