15 வயதில் கர்ப்பமான சிறுமி..! குழந்தையும் பிறந்தது..! காரணம் 37 வயது மூர்த்தி..! செங்கல் சூளையில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

15 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேட்டூரில் கருமலைக்கூடல் துறையூர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு மூர்த்தி என்ற 37 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் பழனியம்மாள். இத்தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் சொந்தமாக அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

இவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று அந்த 15 வயது சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இதுகுறித்து மகளிடம் விசாரணை நடத்தியபோது, தான் கர்ப்பமானதற்கு செங்கல் சூளை உரிமையாளர் மூர்த்தி தான் காரணம் என்று கூறியுள்ளார்.

உடனடியாக சிறுமியின் தாயார் மூர்த்தியிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ இந்த விஷயத்தை வெளியே கூறினால் இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் சில மாதங்கள் கழித்து அந்த சிறுமிக்கு மேட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அழகான குழந்தை பிறந்துள்ளது. 

தற்போது சிறுமி மற்றும் அவரது தாயார் தைரியம் வரவழைத்துக் கொண்டு செங்கல் சூளை உரிமையாளர் மூர்த்தி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மூர்த்தியை போக்சோ சட்டத்திற்கு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.