திருவனந்தபுரம்: முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம், தனது கிளை அலுவலகங்களில், 15 கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
ஒரே நாளில் இழுத்து மூடப்பட்ட 15 முத்தூட் நகை அடகு கடைகள்! பீதியில் வாடிக்கையாளர்கள்! பரபரப்பு காரணம்!

தமிழகம், கேரளா உள்பட பல்வேறு இடங்களில் நிதி சேவை வழங்கி வரும் முத்தூட்
ஃபைனான்ஸ், திடீரென கேரளாவில் உள்ள தனது கிளைகளில் , 15 கிளைகளை மூடுவதாக,
அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, நாளிதழ் ஒன்றில் விளம்பரம் வெளியிட்டுள்ள முத்தூட் ஃபைனான்ஸ்,
இந்த மூடுவிழா உடனடியாக அமலுக்கு வருவதாகக் கூறியுள்ளது. ஆனால், இதற்கான காரணம்
என்னவென்று இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அடிப்படை ஊதிய உயர்வு, முறையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தூட் ஃபைனான்ஸ் ஊழியர்கள் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி முதலாக, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முத்தூட் நிறுவனம் இம்முடிவை மேற்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதன்படி, செப்டம்பர் 4ம் தேதியுடன், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கத்ரிகடவு, பனங்காடு, கங்காரப்பாடி, பொன்னரிமங்கலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பேரிங்கமலா, உள்ளூர், கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலுர், கொட்டரக்கரா, பரணிகாவு, கோட்டயத்தில் உள்ள தெங்கானா, இடுக்கியில் உள்ள குமிலி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பத்ரிப்பாலா, சுல்தான்பேட்டை, மலப்புரத்தில் உள்ள சாங்குவெட்டி, டவுன் ஹில் ஆகிய கிளைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.