3 முறை வீட்டை விட்டு ஓடியவள்! 14 வயதில் செய்யக் கூடாததை செய்த மகள்! கதறி அழும் தாய்! என்னாச்சு தெரியுமா?

மத்திய பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுமி ஒருவர், இதுவரை மூன்று முறை வீட்டை விட்டு ஓடியதை கண்டித்த அவரது தாயார் மீது கோபித்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேசத்தில் போபால் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு 14 வயது மிக்க ராதிகா என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். ராதிகா அருகில் இருக்கும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ராதிகாவின் தாய் தந்தையர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ராதிகாவின் தந்தை கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரையும் விட்டு விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அன்று முதல் ராதிகா அவருடைய தாயுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராதிகாவுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த ராதிகாவின் தாயார் தனது மகளை அழைத்து கண்டித்து இருக்கிறார். மேலும் இனி அந்த இளைஞருடன் பேசக்கூடாது எனவும் கூறியிருக்கிறார். இப்படி இருக்க மீண்டும் அந்த இளைஞனுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராதிகா பேசி இருந்திருக்கிறார்.

இதனை அறிந்த அவரது தாயார் மீண்டும் அவரை கடுமையாக திட்டி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி ராதிகா வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் உடனடியாக ராதிகாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது தாயாரிடம் விசாரித்த பொழுது, சிறுமி ராதிகா ஏற்கனவே மூன்று முறை யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடியதாகவும் அவரை தான் தான் அழைத்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். போலீசார் அந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.