கதிரேசன் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னான்! அதான் எல்லாத்துக்கும் சம்மதிச்சேன்! 14 வயதில் கர்பபமாகி பெற்றோரை அதிர வைத்த சிறுமி!

திருப்பூரில் 14 வயது சிறுமிக்கு கல்யாண ஆசை வார்த்தை கூறி கூலித் தொழிலாளி ஒருவர் சிறுமியை கற்பமாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ளது ஜல்லிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் 14 வயது சிறுமி நேற்றைய தினம் திடீரென்று வயிற்று வலியால் துடித்து உள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று உள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அப்போது அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை பெற்றோரிடம் கூறியுள்ளனர். 14 வயதே ஆன அந்த சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வந்த மருத்துவர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்த தகவலை கூறியுள்ளனர். பின்னர் தகவல் அறிந்த போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

சப்-இன்ஸ்பெ‌க்டர் நிர்மலாதேவி இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறார் . மேலும் இது குறித்து அந்த சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற உண்மையை அவர் கண்டறிந்தார். அதாவது அந்த சிறுமி வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழில் செய்யும் கதிரேசன் என்பவர் ஆவார்.

இவர் அந்த சிறுமிக்கு திருமண ஆசையை கூறி கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அந்த சிறுமி சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா தேவியிடம் கூறி இருக்கிறார். 

இந்த வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான கதிரேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.