தாங்க முடியாத தலைவலி! துடிதுடித்த இளைஞன்! மண்டையில் சிக்கியிருந்த மர்ம பொருள் !ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

தலைவலியால் அவதிப்பட்டு வந்த சிறுவனின் மண்டையோட்டில் பல் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


போர்ச்சுகல் நாட்டை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட சிறுவன். சிறுவனின் வயது 14. இவன் கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் மிகுந்து தலைவலியால் அவதிப்பட்டு வந்தான். பெற்றோர் இவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சாதாரண தலைவலிக்கான மருந்துகள் கொடுத்து மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

சில நாட்களிலேயே மீண்டும் அந்த சிறுவன் மருத்துவமனைக்கு வந்ததைக்கண்டு மருத்துவர்கள் சற்று அதிர்ச்சி அடைந்தனர். மாத்திரைகளால் தலைவலி குறைய வில்லை என்று சிறுவனின் பெற்றோர் கூறினாலும் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்ப்பதற்கு திட்டமிட்டனர்.

உடனடியாக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். ஸ்கேன் ரிப்போர்டில் சிறுவனின் மண்டைஓடு பகுதியில் சிறிய கட்டி போன்ற பொருள் அமைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அந்த சிறுவனின் மண்டையோட்டிலிருந்து பல்லை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

அதன் பிறகு சிறுவனிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, சில நாட்களுக்கு முன்னால் மைதானத்தில் கால்பந்து விளையாடி கொண்டிருந்தபோது மற்றொரு சிறுவன் பாதிக்கப்பட்ட சிறுவனின் மீது பயங்கரமாக மோதியுள்ளான். அப்போது அந்த சிறுவனின் பல் இந்த சிறுவனின் மண்டையோட்டில் பலமாக மோதியதாக பாதிக்கப்பட்ட சிறுவன் கூறியுள்ளான்.

2 நாட்கள் கழித்து பத்திரமாக பாதிக்கப்பட்ட சிறுவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இந்த சம்பவமானது போர்ச்சுகல் நாட்டில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.