ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரிய வந்த உண்மை! 14 வயது மகள் கர்ப்பம்..! காரணம் தந்தை..! பகீர் சம்பவம்!

பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் டுண்டிகள் என்ற இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி  ஒருவர் கடந்த இரு வாரங்களாகவே கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனிடையே அவருடைய தாயார் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

மருத்துவர்கள் அந்த சிறுமியை பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அந்த 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் கண்டறிந்தனர். பின்னர், இந்த நிகழ்விற்கான காரணம் குறித்து அந்த சிறுமியின் தாயார் பாதிக்கப்பட்ட தன்னுடைய மகளிடம் பக்குவமாக கேட்டறிய  முற்பட்டார். 

அப்போது அந்த சிறுமி தன்னுடைய தந்தையே தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக உண்மையை கூறியுள்ளார். ஏற்கனவே மகள் கர்ப்பமான அதிர்ச்சியில் இருந்த தாயார், தன்னுடைய கணவரே இதற்கு காரணமாக அமைந்து விட்டார் என்பதை தெரிந்துவுடன் பேரதிர்ச்சியில் உறைந்துவிட்டார்‌.

இதனிடையே அந்த சிறுமியின் கருவை கலைப்பதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு தாயும், மகளும் ஏரி இறங்கியுள்ளனர். ஆனால் எந்த மருத்துவர்களும் இதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. நிகழ்ந்தவற்றை கூறி காவல்நிலையத்தில் தாயும், மகளும் புகாரளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட  காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மகளின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.