14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை 4 மாதங்களிலேயே இறந்துபோன சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14 வயதில் ஆண் குழந்தை பெற்றெடுத்த சிறுமி! ஆனால் நான்கே மாதங்களில் நிகழ்ந்த விபரீதம்! திருப்பூர் திகுதிகு!

திருப்பூரில் விஜயாநகர் எனும் இடமுள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். வடமாநில குடும்பத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்காக அங்கு தங்கியிருந்தார். அவரிடம் வசித்து வந்த வட மாநிலத்து இளைஞர் ஒருவர் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் அந்த பெண்ணுடன் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். சில முறை அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். தங்கள் மகள் கர்ப்பம் ஆனதை அறிந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள இளைஞனை தேடி வருகின்றனர். இதனிடையே அந்த சிறுமிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை நன்கு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று நேற்று இறந்து போனது. குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் தான் குழந்தை உயிரிழந்ததற்கான உண்மை காரணத்தை அறிய இயலும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.