14 வயது சிறுமியின் திருமணம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்த சம்பவமானது பாகிஸ்தான் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயதுக்கு வந்தால் போதும்..! பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்ளலாம்..! நீதிமன்றம் பிறப்பித்த பகீர் உத்தரவு!
பாகிஸ்தான் நாட்டிலுள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் யூனிஸ். இவருடைய மனைவியின் பெயர் நஹினா. இத்தம்பதியினருக்கு 14 வயது மதிக்கத்தக்க ஹுமா யூனிஸ் என்ற மகளுள்ளார்.
இதனிடையே ஹுமாவிற்கு சென்ற ஆண்டு அப்துல் ஜாபர் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அப்துல் ஜாபர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். அக்டோபர் மாதத்தில் அப்துல் ஜாபர் ஹுமாவை கட்டாய மதமாற்றம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளாததால் கட்டாய மதமாற்றம் செய்துள்ளார்.
பின்னர் 14 வயது என்றும் பாராமல் ஹுமாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் செல்லாது என்று பெற்றோர் சிந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் நேற்று அதிர்ச்சிகரமான தீர்ப்பை வெளியிட்டனர்.
அதாவது, இஸ்லாமிய மதத்தின் ஷரியத் சட்டத்தின்படி 14 வயது நிரம்பிய இளம்பெண்ணின் திருமணம் செல்லும் என்றும், முதல் மாதவிடாய் சுழற்சியை அனுபவித்தாலும் திருமணத்திற்கு தடை இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இளம் பெண்ணின் பெற்றோர் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
அதில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் நடந்துள்ளதாகவும், 18 வயது உரிய பெண்களின் திருமணம் செல்லாது என்றும் கூறியுள்ளனர். இளம் பெண்ணின் வயது சரிபார்க்க வேண்டிய காவல்துறையினர் அப்துல் ஜாபருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமியின் பெற்றோர் பாடசாலை மற்றும் தேவாலயத்தில் சிறுமிக்கு வழங்கப்பட்டிருந்த பிறப்புச் சான்றிதழை ஆதாரமாக வைத்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.