10 வயது சிறுவனால் கர்ப்பம்! 13 வயது சிறுமி விஷயத்தில் வெளியான அடுத்த அதிர்ச்சி தகவல்!

ரஷ்யாவில் 13 வயது சிறுமி 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சிறுமி வேறு ஒரு நபர் தான் தன் கர்ப்பத்திற்கு காரணம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.


ரஷ்யாவில் டார்யா என்ற 13 வயது சிறுமியும், ஐவன் என்ற 10 வயது சிறுவனும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் டார்யா கர்ப்பம் ஆனதால் தனது கர்ப்பத்திற்கு காரணம் ஐவன் தான் என்று கூறிவந்தார். இதனால் இந்த ஜோடி உலகம் முழுவதும் வைரலாகியது. இந்நிலையில் தற்போது 6 மாத கர்ப்பமாக உள்ள 13 வயது சிறுமி டார்யா தனது கர்ப்பத்திற்கு ஐவன் காரணமில்லை. வேறு ஒரு நபர் தான் காரணம் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

தன்னை அந்த நபர் பலாத்காரம் செய்ததாலேயே தான் கர்ப்பமானதாகவும் அவர் தற்போது கூறியுள்ளார். மேலும் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையின் உண்மையான தந்தை குண்டாகவும் உயரமாகவும் இருப்பார் எனவும் அவருக்கு பதினாறு வயது இருக்கும் எனவும் டார்யா கூறியுள்ளார். அந்த நபர் நான் படிக்கும் பள்ளியில் பயிலவில்லை. ஆனால் நான் வசிக்கும் பகுதியில் தான் அவரும் வசித்து வருகிறார். மேலும் அந்த வலி மிகுந்த நிமிடங்களை இதற்கு மேல் என்னால் விலக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு ஏற்பட்ட பலாத்காரம் குறித்து போலீசாரிடம் முழு விளக்கத்துடன் புகார் கொடுத்துள்ளேன். தற்போது அந்த நபரைப் போலீசார் எதுவும் செய்யவில்லை. தனக்கு குழந்தை பிறந்த பின்பு குழந்தையின் டிஎன்ஏ வை வைத்து அந்த நபருடன் பரிசோதனை நடக்கும். அதன்பின்னரே அவர் மீது நடவடிக்கை பாயும் எனவும் டார்யா கூறியுள்ளார். 13 வயது சிறுமி டார்யா 10 வயது சிறுவன் ஐவனை தொடர்ந்து காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.