எஸ்கலேட்டரில் ஏறிய போது சிக்கிய தலை..! துடியாய் துடித்த சிறுவன்! பதறிய பெற்றோர்! சரவணா ஸ்டோர் விபரீதம்!

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் கடையில் இருந்த எஸ்கலேட்டரில் 13 வயது சிறுவன் வேடிக்கை பார்த்த படி தலையை சாய்த்து வைத்துள்ளான். திடீரென அவனது தலை எஸ்கலேட்டரில் சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உயிருக்கு எவ்வித ஆபத்து இன்றி சிறுவன் காப்பாற்றப்பட்டான்.


சென்னை கன்னிகாபுரத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணி எடுப்பதற்காக நேற்று மாலை தனது மகன் ரணீஷ் பாபுவுடன் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோருக்குச் சென்றார். இந்நிலையில், பொங்கல் பண்டிகை என்பதால் அனைவருக்கும் துணி எடுக்கும் நோக்கில் சரவணா ஸ்டோரில் உள்ள 8-வது மாடிக்கு இருவரும் எஸ்கலேட்டரில் சென்றனர்.

இந்த நிலையில் சிறுவன் ரணீஷ்பாபு எஸ்கலேட்டரின் நகரும் கைப்பிடியின் மீது தலையைச் சாய்த்தவாறு கீழ்த்தளத்தை வேடிக்கை பார்த்தவாறே சென்றுள்ளான். இதற்கிடையில், எஸ்கலேட்டர் 8-வது தளத்தில் சென்று சேரும் இடத்தில் உள்ள நிலையான சுவருக்கும், எஸ்கலேட்டரின் நகரும் கைப்பிடிக்கும் இடையே உள்ள சிறு இடைவெளி ஒன்று இருந்துள்ளது. அதனை கவனிக்காமல் சிறுவனின் தலை அதில் சிக்கிக் கொண்டதுள்ளது. 

இதனை அறிந்த கடையின் ஊழியர்கள் அனைவரும் முதலில் எஸ்கலேட்டரின் மின் இணைப்பை நிறுத்தி உடனடியாக சிறுவனை மீட்டனர். ஆனால் சிறுவன் ரணீஷ்பாபுவின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து . சிறுவனின் தயார் சசிகலா தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பான சசிகலா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளர். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் சிறுது நேரம் சரவணா ஸ்டோரில் பரபரப்பு ஏற்பட்டது.