வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று 60 நாட்கள் வரை சும்மா படுத்தே கிடப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 13 லட்சம் ரூபாய் சம்பளம் அறிவித்துள்ளது.


தமிழ் திரைப்படம் ஒன்றில் சும்மாவே இருப்பது எவ்வளவு கஷ்டமான செயல் எனக் கூறும் வகையில் ஒரு நகைச்சுவைக் காட்சி ஒன்று வரும். இயல்பு வாழக்கையிலும் அத்தகைய சவாலுடனான வேலைக்கு ஆட்களைச் சேர்ந்துள்ளது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒன்று. புவி ஈர்ப்பு விசை இல்லாத இடங்களில் உறக்கம் தொடர்பான ஆய்வை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த ஆய்வு ஜெர்மனியில் நடத்தப்பட உள்ள நிலையில் ஜெர்மன் மொழி பேசத் தெரிந்த 12 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுடைய வேலை என்னவென்றால் 60 நாட்களும் அவர்கள் ஒரே இடத்தில் படுத்துக் கிடக்க வேண்டியது மட்டும் தான் 

இதில் பங்கேற்க இருப்பவர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழு புவி ஈர்ப்பு இல்லாத இடத்தில்  60 நாள்கள் தங்க வைக்கப்பட்டு, அதன்பிறகு அவர்களின் மனநிலை பரிசோதிக்கபட இருக்கிறது. முக்கியமானது என்னவெனில் உணவு, கழிவறை என அனைத்தும் படுத்த இடத்திலேயே தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில், விண்வெளி வீரர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.13 லட்சம் வழங்க அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.