வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்டை அப்படியே ஸ்வாகா செய்த மலைப்பாம்பு..! சீனா அலறல்!

முழுமையாக வளர்ந்த ஆட்டை மலைப்பாம்பு விழுங்கிய சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் ப்யூஜியான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இதன் புறநகர் பகுதிகளில் அடர்ந்த காடுகள் அமைந்துள்ளன. அவ்வப்போது காடுகளிலிருந்து மலைப்பாம்புகள் மற்றும் பிற கொடிய விலங்குகள் ஊர் பகுதிகளுக்குள் வந்து சேரும். 

இதேபோன்று சில நாட்களுக்கு முன்னர் வீட்டு பகுதிக்குள் 13 அடி நீள மலைப்பாம்பு நுழைந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் வளர்த்து வந்த ஆட்டை மலைப்பாம்பு தாக்கியுள்ளது. பாம்பு தாக்கியதில் சில நிமிடங்களிலேயே அந்த ஆடு மூச்சுத் திணறி மயங்கி விழுந்துள்ளது.

அதன் பின்னர் மலைப்பாம்பு முழுமையாக வளர்ந்த ஆட்டை அப்படியே விழுங்கியது. நாடு முழுவதும் மழை பாம்பின் வயிற்றில் சென்றது. ஆட்டின் அலறல் சத்தத்தை கேட்ட உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வனத்துறையிடம் தகவல் தெரிவித்தார்.

வனத்துறையினர் மலைப்பாம்பை அலைக்கழித்தனர். மலைப்பாம்பு தன் வயிற்றிலிருந்த ஆட்டை வெளியே கக்கியது. உடனடியாக வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு மலைப்பாம்பை வனப்பகுதியில் சேர்த்தனர்.

இந்த சம்பவமானது சீன நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.