வயிறு வலிப்பதாக டாக்டரிடம் சென்ற 12ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்தது! காரணம் 11ம் வகுப்பு மாணவனாம்!

திருப்பூர் மாவட்டத்தில் 11ம் வகுப்பில் உடன் படித்த மாணவர் செய்த மன்மத லீலை வேலையால் தற்போது 12ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது சக மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கி வருகிறது ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு படிக்கும் மாணவர்களில் 11ம் வகுப்பில் ஒரே வகுப்பை சேர்ந்த மாணவிக்கும், மாணவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.  

இருவரும் காதலித்து வந்த நிலையில் பலமுறை தனிமையில் இருந்த நேரத்தை பயன்படுத்திய மாணவர் மாணவியிடம் அத்து மீறியுள்ளார். பலமுறை இருவரும் உல்லாசமாக இருந்ததால் மாணவிக்கு கர்ப்பம் தரித்துள்ளது. இதனால் மாணவர் 12ம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்.

இதை வெளியில் சொல்ல முடியாத மாணவி தனக்கு ஏற்பட்ட அவல நிலையை வெளியில் சொல்ல முடியாமலும் கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்தார். கத்தரிக்காய் முத்தினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்பது போல தற்போது 12ம் வகுப்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி கர்ப்பமாக இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை அடுத்து மாணவி மருத்துவமனையிலேயே தங்கி குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவல்கள் தற்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் மாணவி தந்த தகவலில் போலீசார் மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மேலும் மாணவிக்கு 17 வயது என்பதால் அவருக்கு பிறந்த குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு 18 வயது ஆன பின்னர் மீண்டும் அவரிடம் குழந்தை ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. பொதுவாக பெண்கள் கர்ப்பம் தரித்தால் 5வது மாதத்தில் இருந்தே அவர் கர்ப்பமாக இருப்பதை அவரது உடல்வாகு அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் வீட்டில் தினமும் பள்ளிக்கு செல்லும் மகள் கர்ப்பமாக இருந்ததை 10 மாதங்கள் வரை பெற்றோருக்கு தெரியாமல் சென்றது எப்படி என தெரியவில்லை.

ஒருவேளை மாணவி கர்ப்பம் தரித்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்ததும் வெளியில் சொல்லாமல் இருந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. இதில் கூடுதலான சந்தேகம் நாள்தோறும் குறைந்த பட்சம் 7 மணிநேரம் பழகும் ஆசிரியர்கள், சக மாணவிகளுக்குக் கூட மாணவி கர்ப்பமாக இருக்கும் விஷயம் 10 மாதங்களாக தெரியாமல் போனதா என்பதும் உங்களுக்கு எழுந்துள்ள கேள்வி. உண்மைதானே?