12ம் வகுப்பு மாணவனால் பெண்களுக்கு ஏற்பட்ட விபரீதம்..! டிக்டாக்கில் பரவிய வீடியோவால் பரபரப்பு!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் இளம் பெண்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து டிக்டாக்கில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அசாம்கர் பகுதியில் இரண்டு சகோதரிகளின் புகைப் படங்களை மார்பிங் செய்து டிக் டாக் செயலில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பதிவிட்டிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு டிக்டாக்கில் பதிவேற்றம் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதனையடுத்து அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் இந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் பங்கஜ் சாஹ்னி தான் இம் மாதிரியான கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. 

மாணவன் பங்கஜை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் . அந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அப்போது அந்த மாணவன் ஒரு திருமணத்தின் போது இந்தப் பெண்களைப் பார்த்ததாக கூறினான். 

இதற்குப் பின்பு அந்த பெண்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து வீடியோவாக டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளது தெரியவந்தது. இவரது பதிவேற்றம் செய்வதற்காக புதியதாக போலியான அக்கவுண்ட்களை டிக் டாக் மற்றும் ஃபேஸ்புக்கில் அந்த சிறுவன் உருவாக்கியதாகவும் விசாரணையில் கூறியது குறிப்பிடத்தக்கது. 

மாணவன் பங்கஜ்ஜின் கைது சமூக ஊடகங்களில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மீறிய அளவை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைப் பற்றி காவல்துறை அதிகாரி திரிவேணி சிங் பேசுகையில், இந்த வழக்கில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட டிக்டாக்கிற்கு நாங்கள் ஒரு அறிவிப்பை அளிக்க உள்ளோம். மேலும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.