காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! வீடியோ எடுத்து பணம் பறித்த கொடூரம்!

12-ஆம் வகுப்பு மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 6 பேரில் 3 பேரை கைது செய்துள்ள போலீசார் ஒருவனை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


குஜராத் மாநிலத்தில்  வடோதராவைச் சேர்ந்த அந்தப் பெண் பிரதீப் என்பவனை காதலித்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் பல இடங்களுக்கு சென்று காதல் வளர்த்துள்ளனர். அப்போது இருவரும் பல நேரங்களில் உல்லாசமாக இருந்துள்ளனர் .இதனை பிரதீப் காதலிக்கு தெரியாமல் வீடியோ பதிவு செய்துள்ளான்.

இந்நிலையில் தன்னுடன் அந்த மாணவி ஆட்சேபகரமான நிலையில் இருந்த போது அவன் தன் நண்பர்களைக் கொண்டு புகைப்படம் எடுத்ததாகவும் பின்னர் அந்தப் புகைப்படத்தைக் காட்டி மிரட்டி காதலியை மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் வரை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவன் அந்த புகைப்படத்தை தனது மற்ற நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளான்.

அவர்கள் ஒவ்வொருவராக அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகா பிரதீப், மற்றும் அவனது நண்பர்களான சவுகான், ரோஹித் என்ற மூன்று பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவனை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், தப்பியோடி தலைமறைவான மேலும் இருவரை தேடி வருகின்றனர்.