அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு 12 ஆண்டுகளாக தினமும் சுமார் 100 முறை விக்கல் ஏற்பட்ட நிலையில் அதற்கு அந்தப் பெண்ணுக்கு பிரசவத்தின் போது ஏற்பட்ட வலிப்பு பாதிப்பே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 100 முறை விக்கல் வரும்..! 12 வருடங்களாக பாடாய் படும் இளம் தாய்..! காரணம் பிரசவத்தின் போது..! அதிர்ச்சி தகவல்!

லிங்கன் நகரைச் சேர்ந்தவர் கிரேவ்ஸ். இவரது பிரச்சினை மிகவும் அரிதானது. தனக்கு ஏன் நாள் முழுவதும் இத்தனை முறை விக்கல் ஏற்படுகிறது என்பதே தெரியாமலும் அவர் இருந்தார். அவரது இயல்பு வாழ்க்கையையே பாதித்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்
எலுமிச்சம் பழத்தை உறிஞ்சுதல், மீண்டும் மீண்டும் குதித்தல் உட்பட பலரும் சொன்ன யோசனைகளை பின்பற்றியும், பலனில்லை. சில மருத்துவர்கள் அவருக்கு பிரெய்ன் டியூமர் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதன் காரணமாகவே விக்கல் ஏற்படுவதாகவும் கூட தெரிவித்தனர். இந்நிலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உட்பட பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் முடிவுக்கு வந்தது இதுதான்.
கிரேவ்ஸின் முதல் பிரசவத்தின் போது அவருக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ள வலிப்பே அவரது விக்கலுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விக்கல் என்பது வலிப்பு, மூளைக்காய்ச்சல், மூளைக் கட்டிகள் உள்ளிட்ட தீவிர பாதிப்புகளுடன் தொடர்புடையது. இவை பிரசவத்தின் போது பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக ஏற்பட வாய்ப்புள்ளது.
நாட்பட்ட விக்கல்களுக்கு தீர்வு உண்டு என்று மருத்துவர்கள் கூறினாலும் 12 ஆண்டுகளாக விக்கலுடன் பழகிவிட்டதாகக் கூறும் கிரேவ்ஸ் இதன் பிறகு விக்கலுக்கு எடுக்கும் சிகிச்சையால் வேறு பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகளைக் கருதி தனக்கு சிகிச்சையே வேண்டாம் என மறுத்து வருகிறது.