ரயிலில் பயணம் செய்த 12 பேருக்கு கொரோனா வைரஸ்..! உறுதி செய்தது இந்திய ரயில்வே..! பயணத்தை தவிர்ப்பது நல்லது! ஏன் தெரியுமா?

இந்தியாவில் ரயில் பயணிகள் 12 பேர் கொரோனாவுடன் பயணம் செய்தது கண்டுபிடித்துள்ளதால் பீதி அதிகரித்துள்ளது.


நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 283 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. இதே போல் கொரோனா பாதிப்பு கேரளாவையும் மிரட்டி வருகிறது. உத்தரபிரதேசத்திலும் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது.

கடந்த 13ந் தேதி ஏபி சம்பர்க் கிராந்தி ரயிலில் பயணம் செய்து 8 பேருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல் மும்பையில் இருந்து ஜபல்பூர் சென்ற கோடன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதே போல் ரயிலில் கொரானா அறிகுறிகளுடன் பயணம் செய்த 2 பேர் இறக்கிவிடப்பட்டனர்.

ஒட்டு மொத்தமாக இந்தியாவில் ரயிலில் பயணம் செய்த 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளுக்கும் பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே கொரோனா நோயாளிகள் பயணித்த ரயிலில் பயணித்த பயணிகளின் விவரங்கள் சேகரிப்படுகின்றன.

இதே போல் ரயில் பயணங்களை முற்றிலும் தவிர்க்குமாறு மக்களை இந்திய ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. ரயில் மூலம் கொரோனா பரவினால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.