நள்ளிரவில் இளைஞனுடன் செல்போனில் கசமுசா! கண்டுபிடித்த தந்தை! இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!

இளைஞருடன் இரவில் பேசிக்கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமானது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட அணைகரைகோட்டானம் கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். தியாகதுருவம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். அங்கே பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். வழக்கமாக ஒரு இளைஞருடன் நெடுநேரம் போனில் பேசி கொண்டிருந்தார். இதனை கண்டித்த விடுதி நிர்வாகம் அவருடைய தந்தையிடம் தகவல் தெரிவித்தனர். 

வார இறுதி நாட்களில் வந்த தந்தை கீர்த்திகாவை கடுமையாக கண்டித்தார். இதனால் மிகவும் மனம் உடைந்தார் கீர்த்திகா. வார இறுதி விடுமுறையில் சொந்த கிராமத்திற்கு வந்து கீர்த்திகா தன் பாட்டியின் வீட்டில் தங்கியுள்ளார். மன உளைச்சலில் இருந்து வெளிவராத கீர்த்திகா, யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்ட கீர்த்திகாவின் பெற்றோர் அலறியடித்து அவரை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வழியிலேயே கீர்த்திகா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். கள்ளக்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த சம்பவமானது கள்ளக்குறிச்சியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.