சாக்லேட் தருவதாக 3வயது சிறுமியுடன் ***வல்லுறவு! 11 வயது சிறுவன் அரங்கேற்றிய விபரீதம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 11 வயதுச் சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.


பாதிக்கப் பட்ட 3 வயதுச் சிறுமி டேராடூன் நகரில் உள்ள தலன்வாலா என்ற இடத்தைச்  சேர்ந்தவள். சிறுமியின் தாய் வீடுகளில் வீட்டு வேலை செய்பவர். தந்தை உணவு விடுதியில் வேலை செய்கிறார். தங்களது குழந்தைகளைல் வீட்டில் விட்டுவிட்டு இருவரும்வேலைக்குசெல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை தனது சகோதர சகோதரிகளுடன் இருந்த  3 வயதுச் சிறுமிக்கு சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி அந்த சிறுவன் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை மறைவான ஒரு இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் வீட்டில் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது தாய் வீடு திரும்பிய பின் தன்னிடம் அந்தச் சிறுவன் நடந்துகொண்ட விதம் குறித்து சிறுமி கூறியதையடுத்து, அவர் சிறுவனை அழைத்து கண்டித்து கேட்க அவன் உண்மையை ஒப்புக்கொண்டான்.

இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சிறுவன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.