11 வருட சீனியாரிட்டி! மாதம் ரூ.55 ஆயிரம் சம்பளம்! ஆனால் ABCD தெரியாத ஆசிரியை! வைரல் வீடியோ!

11 வருடங்களாக பணியாற்றி வரும் ஆசிரியை ஒருவருக்கு ஜனவரி, பிப்ரவரி என்று எழுத தெரியாத சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தில் மிகவும் பிரபலமான பள்ளி அது. அங்கு ஆசிரியை ஒருவர் 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருடைய மாத சம்பளம் 55,000 ரூபாய். 11 வருடங்களாக வேலை பார்த்து வந்த இவர் கிட்டத்தட்ட 76,60,000 ரூபாய் சம்பளம் பெற்று விட்டார்.

இந்நிலையில் இவர் மீது சில குற்றச்சாட்டுகள் பள்ளி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகம் தயாரானது. அவர் நடத்திக் கொண்டிருந்த வகுப்பறைக்கு சென்ற பள்ளி மேல்நிலை நிர்வாகிகள் அவரிடம் ஜனவரி, பிப்ரவரி ஆகிய ஆங்கில மாதங்களை ஆங்கிலத்தில் எழுத கூறியுள்ளனர்.  

திகைத்த ஆசிரியை எழுத முயன்றார். ஆனால் அவரால் எழுத இயலவில்லை. 2 நிமிடம் அவகாசம் கொடுத்த மேல்நிலை நிர்வாகிகள், அவரின் இயலாமையை கண்டு ஆத்திரம் அடைந்தனர். பின்னர் அவரை டிஸ்மிஸ் செய்து பள்ளியில் இருந்து வெளியேற்றினர். 

இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.