தெலுங்கானாவில் 3 வயது சிறுவன் உடலில் பதினோரு ஊசிகள் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதனை வெளியே எடுக்க முடியாமல் தவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 வயது சிறுவன் வயிற்றுக்குள் 11 ஊசிகள்..! ஸ்கேன் எடுத்து பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வீபநகந்தலா என்ற கிராமத்தில் அசோக் அன்னபூர்ணா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி லோகநாதன் என்ற 3 வயது மகன் உள்ளார். இந்த சிறுவனின் தாயார் அன்னபூர்ணா கடந்த வாரம் தன்னுடைய மகனை குளிப்பாட்டி இருக்கிறார்.
குளிக்க வைத்த பொழுது அன்னபூர்ணா என் மகனின் உடலில் இருக்கும் தசைகளில் இருந்து ஊசி வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் அதனை சாதாரணமாக விஷயமாக அவர் விட்டுவிட்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே லோகநாதனால் சரியாக நடக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் சிறுவனது பெற்றோர் அவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அதாவது குழந்தையின் உடலை ஸ்கேன் செய்த பொழுது அவனது இடுப்புக்கு கீழ் இருக்கும் பகுதியில் சுமார் பதினோரு ஊசிகள் இருந்துள்ளதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவர்கள் போராடி ஒருசில ஊசிகளை அந்த சிறுவனின் உடலில் இருந்து அகற்றியுள்ளனர். இருப்பினும் சிறுவனது உடலில் இன்னும் நிறைய ஊசிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனைப் பிறகு எடுக்கலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் அந்த ஊசிகளை எவ்வாறு வெளியேற்றுவது என்று மருத்துவர்கள் குழம்பி உள்ளனர் என்பது வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல் மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோரிடம் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறு கூறி உள்ளனர். பின்னர் சிறுவனின் பெற்றோர் இருவரும் இணைந்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் சிறுவனின் பெற்றோர் அலிவேலம்மா மற்றும் அஞ்சி ஆகிய இருவர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர்கள் தான் அடிக்கடி தங்களுடைய மகனை அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் தான் தன்னுடைய மகனின் உடலில் இந்த ஊசியை செலுத்தி இருக்கலாம் என அவர்கள் இருவரும் சந்தேகித்தனர்.
போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும் மருத்துவர்கள் தங்களுடைய அறிக்கையை சமர்ப்பித்த பின்புதான் போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.