2 நாட்களுக்கு 114 டிகிரியில் கொளுத்தப் போகுது வெயில்..! 11 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்! எங்கெங்கு தெரியுமா?

சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் உருவான அம்பன் புயல் சில தினங்களுக்கு முன்பு கரையை கடந்தது. இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் மிகவும் சுட்டெரிக்கும் என எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை ,வேலூர் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி ,சேலம் ,திருவள்ளூர் ,திருச்சிராப்பள்ளி ,காஞ்சிபுரம் ,திருநெல்வேலி, கரூர் ,மதுரை  ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.