11 நாட்கள்..! ஒருவர் மாறி மற்றொருவர்! 56 வயது முஸ்லீம் பெண்ணுக்கு போலீஸ் ஸ்டேசனில் ஏற்பட்ட பயங்கரம்! அதிர வைக்கும் காரணம்!

பெங்களூரு: 56 வயதான பெண் என்றும் பாராமல் கொடூரமாக சித்ரவதை செய்த, போலீசார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.


பெங்களூருவில் உள்ள கெம்பாபுர அக்ரஹார போலீஸ் நிலையத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பானேர்கட்டா ரோடு அருகே வசிக்கும்  இக்பால் என்ற இளைஞன் சமீபத்தில் தங்கம் திருடியதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், அந்த நபரின் வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட போலீசார், அவரையும், அவரது தாய் ஜபீன் தாஜ் (56 வயது) என்பவரையும் கடந்த அக்டோபர் 24ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம், திருடுபோன தங்கம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது எனக் கேட்டு, போலீசார் விசாரித்துள்ளனர்.

இதில், இக்பாலின் நடத்தை பிடிக்காமல் அவரிடம் தாய் ஜபீன் பேசுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், திருடப்பட்ட தங்கம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது, எனத் தெரியாமல் ஜபீன் புலம்பியுள்ளார். ஆனாலும், விடாத போலீசார், ஜபீனை ஒரு புறமும், அவரது மகன் இக்பாலை ஒரு புறமும் கஸ்டடியில் எடுத்து, கடுமையாக அடித்து உதைத்துள்ளனர்.  

இதில், ஜபீன், உடல் முழுக்க ரத்தக் காயம் அடைந்தார். மேலும், ஜபீனை, அவரது மகன் கண் முன்னாலேயே புடவையை மாற்றி லெக்கின்ஸ் அணிய சொன்ன போலீசார், பிறகு தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்துள்ளனர். தவிர, திருடுபோன தங்கத்திற்கு நஷ்ட ஈடாக, அவரது வீட்டில் இருந்த ரூ.60,000 பணம், சமையல் உபகரணங்கள் என அனைத்தையும் போலீசார் எடுத்து வெளியில் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.   இறுதியாக, 11 நாள் கொடூர சித்ரவதைக்கு பிறகு ஜபீனையும், அவரது மகனையும் கெம்பாபுர அக்ரஹார போலீசார் விடுவித்துள்ளனர்.  

உடல்முழுக்க காயங்களுடன் ஜெயாநகர் ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு, ஜபீன் சிகிச்சை பெற சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதுபற்றி மெடிக்கோ-லீகல் வழக்கு தொடரும்படி அறிவுறுத்தவே, உடனடியாக, அவர் வழக்கறிஞர் உதவியுடன் வழக்கு தொடர்ந்தார். இதன்பேரில், கெம்பாபுர அக்ரஹார போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், கிரைம் பிரிவு போலீசார் ஸ்ரீனிவாஸ், அர்ஜூன் கோம்லே, ஹர்ஷிதா உள்ளிட்டோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யும்படி விஜயநகர் ஏசிபிக்கு, குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையேற்று, வழக்குப் பதிந்த விஜயநகர் ஏசிபி, இதுபற்றி விசாரணை தொடங்கியுள்ளார்.