என் 11 குழந்தைகளுக்கும் கொரோனா நோய் தாக்கிவிட்டது..! குடும்பமே மருத்துவமனையில் முடங்கிய வேதனை!

ஸ்பெயின் நாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் வெளடாய்ட் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு செப்ரியன் மற்றும் ஐரீன் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு 11 குழந்தைகள் உள்ளனர். திடீரென்று ஐரீனின் உடல்நிலை மோசமானதால் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் ஐரீன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து 11 குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இதுகுறித்து செப்ரியன் கூறுகையில், "என் மனைவிக்கு தொற்று ஏற்பட்ட பிறகு குழந்தைகளில் சிலர் மோசமான உடல் நிலைக்கு சென்றனர்.

மற்றவர்கள் நல்ல உடல்நிலையில் இருந்தனர். அதன் பின்னர் அனைவருக்கும் தலைவலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஆகியவையும் ஏற்பட்டுள்ளன. ஆனால் மறுநாளிலேயே அவர்களுடைய உடல்நிலை மோசமாகி உள்ளது. இவர்கள் மூலம் நோய் மிகவும் விரைவாக பரவி விடும் என்ற அச்சத்தில் மருத்துவர்கள் கடுமையான கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

2 வாரங்களுக்கு நிச்சயமாக தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

14 வயதான மகன் ஒருவர்தான் நலமாக உள்ளார் என்பதால் அவரை மட்டும் வீட்டைவிட்டு வெளியே அனுப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அவரும் முகமூடி,கையுறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்ட பிறகே வெளியே செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.