கால்களால் அம்பு எய்து நேர்த்தி! துல்லியமாக இலக்கை தாக்கி அசத்தல்! விருதுநகர் மாணவன் சாதனை!

அம்பு எய்யும் முறையில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் சாதனை படைத்தது நோபல் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பெற்றிருப்பது விருதுநகர் மாவட்டத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சாதனையை படைத்து இருப்பவரின் பெயர் ஷியாம் கணேஷ். இவர் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். தன் இளம் வயதில் இருந்து அம்பு எய்வதில் இவருக்கு மிகவும் ஆர்வம் இருந்தது.

பெற்றோரும் ஆர்வத்தை அறிந்து ஷியாமை அம்பு எய்யும் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். தலைகீழாக நின்று காலின் மூலம் குறி வைத்து அம்பு எய்யும் பயிற்சியில் திறம்பட தேர்ச்சி பெற்றார். தலைகீழாக நின்று காலின் மூலம் குறி வைத்து அம்பு எய்வதில் சாதனை படைத்துள்ளார். 14 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக அடித்துள்ளார்.

ஒன்றரை நிமிட அளவில் மூன்று முறை துல்லியமாக அம்பு எய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையானது நோபல் புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பெற்றிருப்பது இந்திய நாட்டிற்கே அருமையாக அமைந்துள்ளது. 

இப்படிப்பட்ட பிள்ளைகளை ஈன்று எடுக்கவே பல பெற்றோர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். மேலும் இந்த சிறுவனக்கு பயிற்சி அளித்து தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்ய மாநில அரசு முன்வர வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.