கொரானாவை வென்று கம்பீரமாக வீடு திரும்பிய 100 வயது தாத்தா! எப்படி தெரியுமா?

கொரோனா வைரஸ் தாக்குதலை 100 வயதை கடந்த மூதாட்டி ஒருவர் வெற்றிகரமாக எதிர்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.


உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 3500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே சீனாவில் வுஹான் நகரை சேர்ந்த 100 வயது பெண்மணி ஒருவர், வெற்றிகரமாக இந்த நோய் தாக்குதலை எதிர்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சென்ற மாதம் 24-ஆம் தேதியன்று அந்த மூதாட்டி காய்ச்சல் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட சிரமங்கள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா வைரஸ் தாக்குதலை உறுதி செய்தனர். அவர் வுஹான் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா மாற்று சிகிச்சைகள் மற்றும் பாரம்பரிய சீன மருத்துவ முறைகள் ஆகியவற்றை மருத்துவர்கள் மேற்கொண்டனர். மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை பலனளிக்கும் வகையில் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டது.

11 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் இவர் வைரஸ் தாக்குதலில் இருந்து முழுவதுமாக மீண்டார். சிகிச்சை முழுவதையும் முடித்துக் கொண்ட பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த செய்தியானது சீன ஊடகங்களில் வெகுவாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலை வெற்றிகரமாக வென்ற வயதான பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியானது சீனா நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.