மணல் கொள்ளை தொடர்பாக ஆந்திர அரசுக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணல் கடத்தலுக்கு உடந்தை! மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்! NGT அதிரடி!
விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து தண்ணீர் மனிதர் என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் மற்றும் அனுமோலு காந்தி ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கிருண்ஷா நதியில் சோதனை செய்த தேசிய பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் மணல் கொள்ளை நடந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து, ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்ததுடன், கிருஷ்ணா நதியில் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அபராத தொகையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கில் சேர்த்து மாசு கட்டுப்பாட்டுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூலை 23-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.