விபரீத நோய்! டிக் டாக் குழந்தை பிரபலம் 10 வயதில் இறைவனடி சேர்ந்த பரிதாபம்!

டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரசித்தி பெற்ற குழந்தை நட்சத்திரமான ஆருணி மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


10 வயதே ஆன ஆருணி கேரளாவை சேர்ந்தவர். இவர் டிக் டாக்  செயலின் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த சிறுமிக்கு மூளையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடுமையான ஜுரம் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 இவருக்கு திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஐடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் இந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கூற வேண்டும்.

ஆருணி தற்போது பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.  இவரது தந்தை கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு சோகத்தை தாங்க முடியாமல்    அவதி பட்ட இந்த குடும்பம் மீண்டும் இந்த சிறுமியின் உயிரிழப்பால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.  இந்த துயர  சம்பவத்தையடுத்து பலர் ரசிகர்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைத்தளத்தில் மூலம் தெரிவித்துள்ளனர்.