10 வயது மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வக்கிரம்! கையும் களவுமாக சிக்கியவனை கதறவிட்ட போலீஸ்!

10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் கோட்டானா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்ரையா. இவர் அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

சம்பவமறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். காவல்துறையினரிடமிருந்து தப்பி செல்ல முயன்ற போது அவர்கள் வீரபத்ரையாவை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் மூங்கில் குச்சியால் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

வலி தாங்க இயலாத வீரபத்ரையா கதறி அழத்தொடங்கினார். ஒரு கட்டத்தில் செய்த குற்றத்திற்காக அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அனைவரின் கால்களிலும் வீரபத்ரையா விழுந்துள்ளார்.

வீரபத்ரையா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.