ஊட்டியில் பற்றி எரியும் காட்டுத் தீ! ஹெலிகாப்டரை கொண்டு வந்தும் அணைக்க முடியவில்லை! பதற்றத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 10 நாட்களாக தொடர்ந்து இரவு பகலாக பற்றி எறியும் காட்டு தீ 5 எக்டர் பரப்பளவில் வனப்பகுதி கருகி சாம்பல்.


நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் மரம் செடி கொடிகள் கருகியது. தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகளவில் உள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு வருவதும் உடனடியாக வனத்துறையினர் மற்றும் தீ அணைப்புதுறையிர் அனைத்து வந்தனர்.

இந்தநிலையில், கடந்த 10 நாட்களாக குன்னூர் அருகேயுள்ள சரவணமலை  வனப்பகுதியில் காட்டு தீ அதிவேகமாக பரவியது. மலை உச்சியில் இந்த காட்டு தீ பற்றி எரிவதால் அப்பகுதிக்கு தீ அணைப்பு துறையினர் வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்ல முடியாததால் வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது.

வனத்துறை அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி இன்று கோவையில் இருந்து  ஹெலிகாப்டர் வரவழைத்து  அதன் மூலமாக இரண்டு முறை  ரசாயன கலவை தூவப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர்   கோவைக்கு சென்று  விட்ட சற்று நேரத்தில் அப்பகுதியில் மீண்டும்  காட்டு தீ பற்றி எரியத் தொடங்கியது.

காற்று பலமாக வீசி வருவதால் காட்டு தீ அதிகளவில் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர், இந்த வனப்பகுதிகளில் உடனடியாக தீ பற்றிக் கொள்ளும் சீகை,சாம்பிராணி, கற்பூர மரங்கள், மற்றும் அரியவகை மூலிகை செடிகள் உள்ளது.

இப்பகுதியில் பறவைகள், காட்டெருமைகள், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளும் உயிரிழப்பு ஏற்பட்டிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த காட்டு தீயை இனியும் அதிகம் பரவாமல் தடுக்க ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் ரசாயன பொடியை தூவி தீயை அணைக்க வேண்டும் என்று  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.