அடுத்தடுத்து உயிரிழந்த 10 கோடி பன்றிகள்! உணவுத் தட்டுப்பாட்டால் சீனா எடுத்த விநோத முடிவு!

பன்றிக்காய்ச்சலால் 10 கோடி பன்றிகள் உயிரிழந்த சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகின் மிகப்பெரிய இறைச்சி மார்க்கெட்டாக சீனா நாடு விளங்கி வருகிறது. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பன்றிகள் சீனா நாட்டை இருப்பிடமாக கொண்டுள்ளன. சீன மக்களின் பிரத்தியேக உணவாகவும் பன்றிகளே அமைந்துள்ளன. இந்நிலையில் அங்கு சமீபத்தில் பன்றிக்காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டின் முக்கால்வாசி பன்றிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நாட்டில் பன்றி இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 90 சதவீதத்திற்கும் அதிகமான விலைக்கு பன்றிகள் விற்கப்படுகின்றன. சிறு வியாபாரிகள் கொள்முதலிற்க்கு 70 சதவீதம் அதிகமாக பணத்தை அளித்து பெறுகின்றனர். சீனா அரசாங்கமானது பன்றி பண்ணை வைத்திருப்பவர்களுக்கு மானியமளித்து வருகிறது.

மேலும் பண்ணை முதலாளிகளுக்கு அரசு கடுமையான உத்தரவிட்டுள்ளது. அதாவது செயற்கை முறையிலாவது பன்றி இனப்பெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பண்ணை முதலாளிகளிடம் கூறியுள்ளது. அவசர காலத்திற்காக பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த உப்பு போட்ட பன்றி இறைச்சியை அரசு விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் சந்தை அபாயத்தையும் சீனா அரசானது கண்காணித்து வருகிறது. பன்றி தட்டுப்பாடானது சீனாவில் இயல்பு வாழ்க்கையை பெரிதளவில் பாதித்துள்ளது.