சிக்கன் பீஸ் அதிகம் கேட்ட அண்ணனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தம்பி! காரைக்குடி பயங்கரம்!

மது போதையில் சிக்கன் பீஸ் அதிகமாகக் கேட்ட அண்ணனை, சண்டை முற்றியதால், தம்பி பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


காரைக்குடியை சேர்ந்தவர் மீனாள். இவரின் மூத்த மகன் பிரதாப். இவர், சம்பவத்திற்கு முதல் நாள் இரவு சாப்பிடும்போது, கூடுதலாக சிக்கன் பீஸ் வைக்கும்படி, தனது அம்மாவிடம் தகராறு செய்துள்ளார். இதில், அவரது தம்பி பிரதீஸ் அதிருப்தி அடைந்துள்ளார். இதுபற்றி அவர் தட்டிக் கேட்டபோது, அண்ணன், தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர், பிரதாப் மதுபோதையில், வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கிவிட்டார். ஆனால், ஆத்திரம் தணியாத தம்பி, பெட்ரோல் எடுத்துக் கொண்டு வந்து, அண்ணன் மீது ஊற்றி, தீ வைத்துக் கொளுத்தினார். இதில் பலத்த காயமடைந்த பிரதாப், காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது தம்பி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

குடிபோதையில் தாயை ஆபாசமாக பேசியதால் அண்ணனை தம்பி பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆனால் இந்த விவகாரத்திற்கு முதலில் காரணமாக அமைந்தது சிக்கன் பீஸ் தான் என்கின்றனர் அப்பகுதிவாசிகள்.