avengers திரைப்படத்தை பார்த்து இளம்பெண் ஒருவர் கதறி அழுத நிலையில் அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாததால் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவேஞ்சர்ஸ் பார்த்து கதறி அழுத இளம்பெண்! அழுகையை நிறுத்த முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபரீதம்!

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் avengers என்ட்கேம் திரைப்படம் வெளியாகி உள்ளது. அவெஞ்சர்ஸ் ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆளாகும் வகையில் இந்த திரைப்படம் உள்ளதாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் இந்தத் திரைப்படம் ரசிகர்களை கண்ணீர் விட்டு கதற வைக்கும் வகையில் சென்டிமென்டாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் சீனாவில் avengers திரைப்படத்தை 21 வயதே ஆன மாணவி ஒருவர் பார்க்கச் சென்றுள்ளார். அவர் அவெஞ்சர்ஸ் வரிசை திரைப்படங்களில் தீவிர ரசிகை ஆவார். படம் ஓடிக் கொண்டிருந்த போது உணர்ச்சிவசப்பட்டு தொடங்கிய அந்தப் பெண்ணால் ஒரு கட்டத்தில் அழுகையை நிப்பாட்ட முடியவில்லை. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்த அந்த இளம்பெண் ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்து விட்டார்.
இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.