தமிழர்களுக்கு மதிப்பில்லாத குடியுரிமை சட்டத்தை அடிமை அ.தி.மு.க. ஆதரித்தது ஏன்?

புதிய குடியுரிமை சட்டம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இது இந்துக்களுக்கு ஆதரவாகவும், இஸ்லாமியருக்கு எதிரானது என்று சொல்ல முடியும்.


அதே நேரம் அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படாது என்று மத்திய அரசு பேசியிருப்பதுதான் ஆபத்தான அம்சம். பிற நாடுகளில் இருந்து எந்த மதத்தவர் அடைக்கலம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் நம் இந்தியத் திருநாடு இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் தர மறுக்கிறது. அதேபோன்று, இலங்கையிலிருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்களுக்குப் பொருந்தாது என்று மத்திய அரசு சொல்வதுதான் அதிர்ச்சியான விஷயம்.

இலங்கையில் இருந்து வரும் தமிழர்களும் இந்துக்கள்தானே? காரணம் கேட்டால், அவர்கள் தனி நாடு கோரிக்கைக்கான போராட்டத்தால் அகதிகளாக வந்தவர்கள், துன்புறுத்தப்பட்டதால் வந்தவர்கள் அல்ல, அவர்களுக்கு எப்படிக் குடியுரிமை வழங்க முடியும் என்று கேட்கிறார்கள். 

ஆதி தமிழர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானதால்தான் இலங்கையில் தனி நாடு கோரிக்கையே எழுந்தது. பிற நாடுகளில் இருந்து வரும் சீக்கியர்கள், இந்துக்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. இலங்கை தமிழர்களுக்கு மறுக்கபட்டிருப்பதை தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு வரவேற்றதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை உருவாக்குகிறது.

இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் போராடுகிறது. தி.மு.க. கடும் விவாதம் மேற்கொண்டது, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க. மட்டும் ஆதரவு தெரிவிக்கிறது என்றால் என்ன அர்த்தம்.

இந்த ஆட்சியின் கயிறுகள் இன்னமும் மோடியின் கைகளில் இருக்கிறது என்றுதானே அர்த்தம். இது அடிமை ஆட்சி என்று சொல்வதில் என்ன தவறு?