ரேஷன் கார்டு மட்டும் இருந்தா போதும், கூட்டுறவு வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ, அறிவிப்பு செய்ததும், தமிழக மக்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
செல்லூர் ராஜூ 50 ஆயிரம் ரூபாய் கடன் யாருக்கு தெரியுமா?

அவ்வப்போது ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கிவந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என்றால் சும்மாவா..? அத்தனை பேரும் ரேஷன் கார்டுடன் கூட்டுறவு வங்கிக்கு கிளம்பும் ஆர்வத்தில்தான் இருந்தனர்.
இந்த நேரத்தில்தான் கட்சி மேலிடத்தில் இருந்து அழைப்பு வந்ததாம். செல்லூர் ராஜூக்கு கண்டமேனிக்கு திட்டு கிடைத்திருக்கிறது. இப்படி பொத்தாம் பொதுவாக ரேஷன் கார்டுக்கு 50 ஆயிரம் ரூபாய்ன்னு அறிவிச்சா என்ன அர்த்தம்? யாரு கொடுப்பா, உடனே இது தனி நபர் கடன் இல்லை, தொழில் நடத்துபவர்களுக்கு மட்டும்னு தெளிவா சொல்லுங்க என்று கட்டளை இடப்பட்டதாம்.
இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, ‘ரேஷன் கார்டை காட்டுனா சும்மா யாராச்சும் 50 ஆயிரம் கொடுப்பாங்களா? ஏதாவது தொழில் நடத்துனாத்தான் கொடுப்பாங்க. எல்லோரும் மறக்காம போட்டுருங்கப்பா’ என்று அன்பொழுக கேட்டுக்கொண்டார்.
அடச்சே, மக்களுக்கு இல்லையா..?