தி.மு.க. விவகாரத்தில் தலையிட்ட காரணத்தாலே வீரமணியை ஓசிசோறு உண்ணும் ஐயா வீரமணி என்று காரசாரமாக தன்னுடைய கருத்தை வெளியிட்டார் அழகிரியின் மகன் தயாநிதி.
உதயநிதிக்கு ஓசிச் சோறு வீரமணி வரவேற்பு! என்ன சொல்லப்போகிறாரோ தயாநிதி அழகிரி?

ஆனால், இப்போது எந்தக் கட்சித் தலைவரும் வாழ்த்து கூறாத நிலையில், உதயநிதிக்கு வலிந்து போய் வாழ்த்து கூறியிருக்கிறார் கி.வீரமணி. அவர் விடுத்திருக்கும் அறிக்கை இதுதான்.
தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக, திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் நமது இனமானப் பேராசிரியர் மானமிகு க.அன்பழகன் அவர்களால் நியமனம் செய்யப்பட்டு, தி.மு.க. கழகப் பொறுப்பாளர்கள் அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளார் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
துடிப்புமிக்க செயல் வீரராகத் தி.மு.க. இயக்கத்திற்கு இதன்மூலம் தன்னை ஒப்படைக்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. இது பதவி அல்ல; பொறுப்பு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்த பின், தலைவர் பதவி ஏற்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படி பொறுப்பு என்றுதான் கூறி, அதனை ஏற்று, நாடே வியக்கும் அளவுக்குத் திறம்பட பணி ஆற்றி வரலாறு படைக்கிறார்.
சோதனைமிக்க தருணம் இது; அறைகூலை ஏற்கட்டும் அவர். அதுபோலவே, இளைஞர்களிடையே திராவிட இயக்கத்தினையும், அவற்றின் கொள்கை லட்சியங்களை வென்றெடுக்கவும் ஓயாது பணியாற்றி, ஒரு திருப்பத்தை அவர் ஏற்படுத்துவார் என்று எண்ணி, தாய்க்கழகம் தனது பூரிப்பை, மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம். நமது இளைஞர் பட்டாளம் களத்தில் இறங்கி செயல்படவேண்டிய சோதனைமிக்க தருணம் இது. அறைகூலை ஏற்கட்டும் அவர். அவர் பணி வெல்லட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.
என்ன சொல்வார் தயாநிதி என்று எல்லோரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஏமாற்றாதே தயாநிதி.